தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனா: காஸா பூசல் தொடர்பில் அமைதி மாநாடு தேவை

1 mins read
943ffbaa-2911-4281-8d89-ad9d57c8159a
காஸாவில் போர் தொடர்பாக பெரிய அளவிலான, அதிகாரபூர்வமான அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா : காஸாவில் போர் தொடர்பாக பெரிய அளவிலான, அதிகாரபூர்வமான அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

வார இறுதியில் எகிப்தில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு நாட்டுத் தீர்வுக்கான குறிப்பிட்ட கால அட்டவணையையும் திட்டத்தையும் வரையறுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாக மீண்டும் தொடங்க ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஹமாஸ், ஜனவரி 14ஆம் தேதி மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை காஸாவில் கைதியாக வைத்திருக்கும் ஒளிக்காட்சியை ஒளிபரப்பியது.

அது, பாலஸ்தீனிய குழுவிற்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறும் பணயக்கைதிகளை விடுவிக்குமாறும் இஸ்ரேலிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்