தரமற்ற யானை, பூனை வடிவங்கள் கொண்ட காற்சட்டைகளுக்குக் கட்டுப்பாடு

தரமற்ற யானை, பூனை வடிவங்கள் கொண்ட காற்சட்டைகளுக்குக் கட்டுப்பாடு

1 mins read
7d27397b-f5bd-4a93-980d-c8bb96ea0458
தாய்லாந்தின் வடக்கு மாநிலமான சியாங் மாயில் உள்ள சின்ராடா துணி தைக்கும் நிறுவனத்தில் யானைகள் அச்சிடப்பட்ட ஆடைகளைத் தைக்கும் தொழிலாளர்கள். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் பாரம்பரிய பூனை மற்றும் யானை வடிவங்களைக் கொண்ட தரமற்ற காற்சட்டைகள் அந்நாட்டுக்குள் வருவதை நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத் துறைக்கு தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் பூம்தம் வெச்சயாச்சை அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவிலிருந்து வரும் பூனை மற்றும் யானை வடிவங்கள் அச்சடிக்கப்பட்ட காற்சட்டைகள் சரியான பதிப்புரிமை பெற்ற வடிவங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவை மிகவும் தரம் குறைந்தவையா உள்ளன என்றும் திரு பூம்தம் கூறினார்.

“எனவே, சீனாவிலிருந்து வரும் இந்தத் தரம் குறைந்த தயாரிப்புகளிலிருந்து அசல் தயாரிப்புகளைப் பாதுகாக்க பதிப்புரிமைச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை நான் கண்டறிய வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்