லண்டன்: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரன் பிப்ரவரி 16ஆம் தேதியன்று மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் சந்தித்துப் பேசியதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
ஈரானுடனான நட்புறவைப் பயன்படுத்தி செங்கடலில் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதை ஹூதிப் படைகள் நிறுத்த சீனா நெருக்குதல் அளிக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சரிடம் அமைச்சர் கேமரன் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஸிங்ஜியாங், ஹாங்காங் ஆகிய இடங்களில் எழுந்துள்ள மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக பிரிட்டனின் நிலைப்பாடு குறித்தும் திரு கேமரன் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சில பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சீனா தடை விதித்தது குறித்தும் ஊடகத்துறை ஜாம்பவான் ஜிம்மி லாயை விடுவிப்பது குறித்தும் திரு வாங் யியுடன் அமைச்சர் கேமரன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.