பெய்ஜிங்: அமெரிக்கா செல்லும் சீன மாணவர்கள் மீதான ‘துன்புறுத்தலை’ நிறுத்துமாறு வாஷிங்டனிடம் பெய்ஜிங் வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் வாங் சியாவ்ஹோங் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்ட்ரோ மயோர்காசிடம் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது. இரு தலைவர்களும் வியன்னாவில் சந்தித்துக்கொண்டனர்.
முறையான பயண ஆவணங்கள் வைத்திருந்தாலும் சீன மக்கள், அமெரிக்க விமான நிலையங்களில் கடுமையாக விசாரிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள் என்று பெய்ஜிங் பலமுறை அமெரிக்கா மீது குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா செல்லும் சீன மக்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் வாங் கேட்டுக்கொண்டதாக சின்ஹுவா தெரிவித்தது.

