தடையை மீறுவதாக டிக்டாக்மீது இந்தோனீசியா புகார்

1 mins read
42f31edb-6a6a-483d-a9b4-80aa147f0d25
செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதை இந்தோனீசியா தடுத்துள்ளது.   - படம்: இபிஏ

ஜகார்த்தா: செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு இந்தோனீசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஆனால்,  சீன குறும்பட ஒளிக்காட்சி செயலியான டிக்டாக் அதை மீறுகிறது என்று இந்தோனீசிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இத்தடையைத் தொடர்ந்து, இந்தோனீசியா டிக்டாக் மின்வர்த்தக சந்தையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

சிறிய வணிகர்களுக்கு உதவவும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

டிக்டாக்கின் இச்செயல் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் அரசாங்கத்தின் அதிகாரம் மதிக்கப்படாது  என்றும் இந்தோனீசியாவின் சிறிய, நடுத்தரத் தொழில் அமைச்சர் டெட்டன் மஸ்டுகி கூறியுள்ளார். 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்