உரிமமின்றி இயங்கிய உணவகத்தில் நாய், பூனை இறைச்சி பரிமாறப்பட்டதாகச் சந்தேகம்; ஐவர் கைது

உரிமமின்றி இயங்கிய உணவகத்தில் நாய், பூனை இறைச்சி பரிமாறப்பட்டதாகச் சந்தேகம்; ஐவர் கைது

1 mins read
e1f30eb4-331a-49fa-a9eb-3f2388e34b17
வீட்டை உணவகமாக மாற்றி அங்கு நாய், பூனை இறைச்சியைப் பரிமாறியதன் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். - படம்: பிக்சாபே

ஹாங்காங்: ஹாங்காங்கில் உரிமமின்றி இயங்கிவந்த உணவகத்தில் நாய், பூனை இறைச்சி பரிமாறப்பட்டதன் சந்தேகத்தில் பிப்ரவரி 29ஆம் தேதியன்று ஐவர் கைது செய்யப்பட்டனர்.

மோங் கோக் பகுதியிலுள்ள 500 சதுர அடி வளாகத்தில் பல அமைப்புகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் சுமார் 35 கிலோ உறைந்த இறைச்சி கைப்பற்றப்பட்டது.

ஐவரில் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் காலம் ஹாங்காங்கில் தஞ்சம் புகுந்தோர் நால்வர். இவர்கள் வேலை செய்ய அனுமதியும் இல்லை. அத்துடன் விலங்கு வதை தொடர்பிலும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாய்களையும் பூனைகளையும் கொல்வதும் அவற்றின் இறைச்சியை விற்பதும் ஹாங்காங்கில் சட்டவிரோதம்.

கைதானோரில் 50 வயது ஆடவர், தன் வீட்டை உரிமமின்றி ஓர் உணவகமாக மாற்றி நடத்திவந்ததாகக் கூறப்படுகிறது. கைதான குடிநுழைவு குற்றம் புரிந்தோரில் 16 வயது இளைஞன் ஒருவரும் அடங்குவார்.

குறிப்புச் சொற்கள்