தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் உள்ள பிலீப்பீன்ஸ் தூதருக்குச் சீன தூதரகம் கண்டனம்

1 mins read
ca87e7d0-fea9-447e-9bd3-1adaf44bf228
ஏற்கெனவே இருநாடுகளுக்கும் இடையில் தென்சீனக் கடல் தொடர்பாக பூசல் உள்ள நிலையில் இச்சம்பவம் மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: அமெரிக்காவில் உள்ள பிலீப்பீன்ஸ் தூதர் ஹோசே மெனுயல் ரோமுவல்டெசுக்கு பிலீப்பீன்சில் செயல்படும் சீனத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

அமெரிக்காவும் பிலீப்பின்சும் தென்சீனக் கடலின் பாதுகாப்பு குறித்தும் தைவான் கடல் பகுதியில் ஏற்படவுள்ள பூசல் குறித்தும் அக்கறையுடன் கண்காணித்து வருவதாகக் கடந்த மாதம் 28ஆம் தேதி திரு ஹோசே வா‌ஷிங்டனில் தெரிவித்தார்.

ஹோசேவின் பேச்சு ஆதாரமற்றவை, அவரின் கருத்துகள் சீனாவுக்கு எதிராக செய்திகளைப் பரப்புவதாக தூதரகம் தெரிவித்தது. தூதரகத்தின் கண்டனத்திற்கு பெய்ஜிங்கில் உள்ள பிலீப்பீன்ஸ் தூதரகம் பதில் ஏதும் அளிக்கவில்லை. ஏற்கெனவே இருநாடுகளுக்கும் இடையில் தென்சீனக் கடல் தொடர்பாக பூசல் உள்ள நிலையில் இச்சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்