முக்கியமான பல சீன நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன

முக்கியமான பல சீன நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன

2 mins read
a58a20c4-5006-48eb-a691-a90757e0ff3b
உலக அளவில் 44 கடலோர நகரங்கள் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றன. அவற்றில் 30 ஆசியாவில் உள்ளது.  - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவில் உள்ள முக்கியமான நகரங்களில் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் வெள்ளம், மழை, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அது தொடர்பாக ஜார்னல் சயின்ஸ் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

ஆய்வுக் கட்டுரையின் தகவலால் பல மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

சீனாவின் நகரங்களில் உள்ள 45 விழுக்காடு நிலப்பரப்பு ஆண்டிற்கு 3 மில்லிமீட்டர் வரை நீரால் மூழ்கிவிடுகிறது. இதில் 16 விழுக்காடு நிலப்பரப்பு 10 மில்லிமீட்டர் நீரால் மூழ்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

தற்போது சீனாவில், நகரங்களில் 900 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாழ்கின்றனர். சிறிய அளவில் நில பற்றாக்குறை ஏற்பட்டாலும் நகர கட்டமைப்பில் கடுமையான நெருக்கடி வரும் என்று ஆய்வை நடத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இயற்கைப் பேரிடர்களால் சீனா ஆண்டிற்கு 1 பில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்குகிறது.

அடுத்த நூற்றாண்டில் சீனாவின் கடலோரப்பகுதியில் உள்ள கால் பங்கு இடங்கள் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படலாம். இதனால் பல நெருக்கடிகளை சீனா சந்திக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடக்குப் பகுதியில் உள்ள டியாஞ்சின் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் 3000க்கும் அதிகமான மக்கள் வேறு இடங்களுக்கு மாறினர். டியாஞ்சின் நகரத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாழ்கின்றனர்.

உலக அளவில் 44 கடலோர நகரங்கள் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றன. அவற்றில் 30 ஆசியாவில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்