தொழில்நுட்ப நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் தென்கிழக்காசியா

தொழில்நுட்ப நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் தென்கிழக்காசியா

1 mins read
2d313590-5c3c-4c13-9eeb-1e3638d34b1c
படம்: - தமிழ் முரசு

தென்கிழக்காசியா: தொழில்நுட்பத்துடன் அதிகம் தொடர்பில்லாதிருந்த தென்கிழக்காசிய வட்டாரம் இப்போது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், என்விடியா போன்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக இந்த வட்டாரத்திற்கு வந்தனர். தென்கிழக்காசியாவில் பல பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்யப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தோனீசியா, மலேசியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

இந்த அம்சத்தைப் பொறுத்தவரை பல ஆண்டு காலமாக தென்கிழக்காசியா, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பின்னால் இருந்தது. இப்போது சுமார் 675 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இவ்வட்டாரம் என்றும் இல்லாத அளவில் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்த்துவருகிறது.

தென்கிழக்காசியாவில் வரும் ஆண்டுகளில் தரவு நிலையங்களை அமைப்பதற்காக மட்டும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 60 பில்லியன் டாலர் (81.29 பில்லியன் வெள்ளி) வரை செலவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்காசியாவில் இளையர்கள் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்