பிலிப்பீன்ஸ் பட்டாசுக் கிடங்கு வெடிப்பு: ஐவர் மரணம், 38 பேர் காயம்

பிலிப்பீன்ஸ் பட்டாசுக் கிடங்கு வெடிப்பு: ஐவர் மரணம், 38 பேர் காயம்

1 mins read
9fb1345d-a7e1-454f-a576-d3e654dbf4fa
மாண்டோரில் 4 வயது குழந்தையும் அடங்கும். - படம்: இணையம்

மணிலா: பிலிப்பீன்சின் தென்பகுதியில் உள்ள பட்டாசுக் கிடங்கில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐவர் உயிரிழந்தனர். கிடங்கில் பணிபுரிந்த நால்வரும் மாண்ட ஊழியர் ஒருவரின் 4 வயது குழந்தையும் உயிரிழந்ததாக அந்நாட்டு அவசரநிலை சேவை ஜூன் 30ஆம் தேதியன்று தெரிவித்தது.

38 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெடிப்புச் சம்பவம் ஜூன் 29ஆம் தேதி பிற்பகல், ஸம்போவாங்கா நகரில் நிகழ்ந்தது.

அந்த சக்திவாய்ந்த வெடிப்பின் காரணமாக கிடங்கு நின்ற நிலத்தில் ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

கிடங்கு வெடித்துச் சிதறியதாகவும் அருகில் இருந்த கட்டடங்கள், வீடுகள் ஆகியவை சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் போராடியதாகவும் வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்