இயற்கைப் பேரிடரால் சீனாவுக்கு$17 பில்லியன் இழப்பு

1 mins read
a7445d8e-da38-4d73-a8ae-3d314897ccd8
சீனாவில் ஜனவரி முதல் ஜூன் வரையில் நிகழ்ந்த பேரிடர்களில் குறைந்தது 32.38 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். - படம்: இபிஏ

பெய்ஜிங்: இயற்கைப் பேரிடர் காரணமாக இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவுக்கு 93.16 பில்லியன் யுவான் (S$17.23 பில்லியன்) மதிப்புள்ள பொருளியல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பேரிடர் தொடர்பில் இதுதான் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள ஆகப் பெரிய இழப்பு என்று அவசரகால நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2024ல் சீனாவை குளிரும் மழையும் மாறி மாறி வாட்டி வந்தன. ஸின்ஜியாங்கின் வட-மேற்கு வட்டாரத்தை 7.1 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. தென்-மேற்கு வட்டாரங்களை நிலச்சரிவுகள் பதம் பார்த்துள்ளன. தெற்கு மாநிலங்களில் ஓடும் மஞ்சள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான பேரிடர் சம்பவங்களில் ஏறக்குறைய 32.38 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பேரிடர்களில் 322 பேர் காணவில்லை அல்லது மாண்டனர்.

அது மட்டுமல்லாமல் சுமார் 856,000 பேர் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டனர். ஏறக்குறைய 23,000 வீடுகள் அழிக்கப்பட்டன. 3.17 மில்லியன் ஹெக்டர் விளைச்சல் நிலங்களும் சேதமடைந்தன.

இதனால் முந்தைய ஆண்டின் முற்பகுதியுடன் ஒப்பிடுகையில் சீனாவின் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு 38.23 பில்லியன் யுவான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்