பெய்ஜிங்: ஆகாயத் துறை பொறியாளரான வாங் ஹாவ்,45, என்பவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உடற்பருமனுக்கு எதிராக போராடி வருகிறார்.
பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை 2003ஆம் ஆண்டு முடித்த பின்னர் 1.84மீட்டர் உயரமும் 124 கிலோகிராம் எடையும் கொண்ட ஒரு பிள்ளைக்குத் தந்தையானவரின் எடை, பரபரப்பான வேலை சூழலுக்கு இடையே அதிகரிக்கத் தொடங்கியது.
“எனது உடல் எடைக்குக் காரணம் எனது உணவுப் பழக்கத்தில் மிதமிஞ்சிய எண்ணெய்யும் கேலரிகளும் இருப்பதே.
“அத்துடன், மிகக் குறைந்த அளவிலான உடற்பயிற்சி அல்லது அதுவும் இல்லாத நிலை,” என்று திரு வாங் கூறுகிறார்.
இவருக்கு ஏற்ற உடல் எடை 80 கிலோகிராம் என்று மதிப்பிடப்படுகிறது.
இவருக்கு ரத்த அழுத்தமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னால் இவர் தனது உடல் எடையை உணவுப் பழக்கம், பயிற்சி இவற்றின் மூலம் குறைக்க முயற்சி மேற்கொண்ட போதும் அதை அவரால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை.
“நேரமின்மையே மிகப்பெரிய தடையாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“அதுவும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற மனஉறுதியும் வேண்டும்,” என்று இவர் கூறுகிறார்.
சீனாவில் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் அதிக உடல் எடையுடன் இருக்கும் நெருக்கடி நிலையைத் தவிர்க்க அந்நாடு மூன்றாண்டுத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
அதன்வழி, வாங் போன்றவர்கள் ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டிருக்க அது உதவ முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன் தொடர்பில் கடந்த ஜூன் மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதில் 16 அரசாங்க அமைச்சுகளும் துறைகளும் பங்குபெறுகின்றன.
இதுவே அந்நாட்டில், இதுவரை இல்லாத, உடற்பருமனைக் குறைக்க உதவும் ஒரு ஒட்டுமொத்த தேசிய உத்தியாக பார்க்கப்படுகிறது.

