தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஜெர்மனில் நடைபெறும் பிரம்மாண்ட இசைவிழாவில் அசம்பாவிதம்

ராட்டினம் தீப்பற்றியதில் 20 பேர் காயம்

1 mins read
bf816966-6686-4043-ba61-e6f07d7b2343
ஹைபீல்ட் விழாவில் இரு ராட்டின மேடைகளில் தீப்பற்றியதில் நால்வர் காயமடைந்தனர். - படம்: MUECKENMOERDER/X காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

பெர்லின்: ஜெர்மனியின் லெய்ஃப்சிக் நகருக்கு அருகில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் பெரிய ராட்டினம் தீப்பிடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இரு ராட்டின மேடைகளில் இரவு 9 மணிக்குப் பிறகு (ஆகஸ்ட் 18, சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணி) தீ ஏற்பட்டதாகவும் அது விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நால்வருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. ஒருவர் கீழே விழுந்ததில் காயமடைந்தார். மேலும் 18 பேர் புகையைச் சுவாசித்ததால் அவதிப்பட்டனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை, தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.

ஜெர்மன் ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள், சுழலும் ராட்டினத்தின் சக்கரத்தில் உள்ள மேடைகள் எரிவதைக் காட்டின. ராட்டினத்துக்கு மேலே அடர்ந்த கறும்புகை கிளம்பியது.

ஹெலிகாப்டர்கள், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஹைஃபீல்ட் திருவிழா, கிழக்கு ஜெர்மனியின் மிகப்பெரிய சுதந்திரமான ‘ராக்’ இசை விழாவாகக் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு கோடைகாலத்திலும் ஆயிரக்கணக்கானோரை இவ்விழா ஈர்க்கிறது.

இந்த ஆண்டு விழாவில் மேக்லெமோர், தி கூக்ஸ், ஃபிளாக்கிங் மோலி, ரைஸ் அகென்ஸ்ட் ஆகிய குழுக்கள் பங்கேற்கின்றன.

குறிப்புச் சொற்கள்