தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவை முந்திக்கொண்டு தைவான் ஆகாய போர்ப் பயிற்சி

1 mins read
2a46956d-bccc-4a8b-8d91-ecbfebff7cf8
அதிபர் லாய் சிங்-டே பசிபிக் நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ள இருக்கும் வேளையில் தைவான் ஆகாயத் தற்காப்பு பயிற்சியை நடத்தியது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவான் ராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க வியாழக்கிழமை (நவம்பர் 28) காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது.

தைவான் அதிபர் லாய் சிங்-டே இவ்வாறு இறுதியில் அமெரிக்கா வழியாக பசிபிக் வட்டாரத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் வேளையில் அந்தத் தற்காப்புப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

அந்தப் பயணத்தை மனதில்கொண்டு இன்னும் ஒருசில நாள்களில் தைவான் அருகே ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தைவானையும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரத்தையும் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், நிலைமையை ஆராய்ந்து அந்தத் தகவலை வெளியிட்டனர்.

தைவான் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்றும் அதன் அதிபர் திரு லாய் ஒரு ‘பிரிவினைவாதி’ என்றும் சீனா கூறி வருகிறது.

ஆனால், தைவானின் வருங்காலம் குறித்து அதன் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அதிபர் லாய் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுடன் பேச்சு நடத்த அவர் விடுத்த அழைப்புகள் பலனளிக்கவில்லை.

அவர் இம்மாதம் 30ஆம் தேதி தனது பசிபிக் நாடுகளின் பயணத்தைத் தொடங்குகிறார். அமெரிக்காவில் எந்த நகரங்களின் வழியாக அவர் செல்வார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

“அதிபரின் பயணத்தைப் பயன்படுத்தி சீனா ராணுவப் பயிற்சியை மேற்கொண்டால் அது இந்த வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் முயற்சிகளை அப்பட்டமாகத் தூண்டும் நடவடிக்கையாக இருக்கும்,” என்று தைவான் அதிபர் அலுவலகம் புதன்கிழமை (நவம்பர் 27) கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்