வரிவிதிப்பில் பிரச்சினை; சீனா தொடர்பான டிரம்ப்பின் கொள்கையில் சிக்கல்

வரிவிதிப்பில் பிரச்சினை; சீனா தொடர்பான டிரம்ப்பின் கொள்கையில் சிக்கல்

2 mins read
5f93dcc2-993d-4b64-ad3d-130022bc415e
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - கோப்புப் படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: கடந்த 2025ஆம் ஆண்டு தாம் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு திரு டோனல்ட் டிரம்ப், வரிவிதிப்பின் மூலம் சீனாவுடனான அமெரிக்காவின் உறவை மாற்றியமைக்கப்போவதாகக் கூறினார்.

சீனா, அதன் வர்த்தகக் கொள்கைகளைக் கொண்டு அமெரிக்காவை அழித்து வருவதாக அவர் சாடியிருந்தார்.

ஆனால், திரு டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அவரின் வர்த்தக ரீதியான நடவடிக்கைகள் பெய்ஜிங்கின் வர்த்தக நடவடிக்கைகளையோ ராணுவச் செயல்களையோ அதிகம் மாற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, சீனா தொடர்பிலான வா‌ஷிங்டனின் கொள்கை தெளிவில்லாமல் இருப்பதுடன் அது, அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் பேசப்படுவதற்கு நேர்மாறான முடிவுகள் எடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் அணுகுமுறை தெளிவில்லாமல் இருப்பது கடந்த சில மாதங்களாகத் தெளிவாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, முன்னணி சீன நிறுவனங்கள் சில, அமெரிக்க ராணுவக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. ஆனால், சிறிது நேரத்தில் அந்நிறுவனங்கள் அப்பட்டியலிலிருந்து அகற்றப்பட்டன.

அதோடு சீனாவுக்கு செயற்கை நுண்ணறிவுப் பகுதிமின்கடத்திகள் கிடைப்பது ஒரு தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று அமெரிக்க அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், அதற்கு சில நிமிடங்கள் கழித்து சீனாவுக்கு அவற்றை விற்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.

வரும் மே மாதம் 14, 15ஆம் தேதிகளில் திரு டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்களைச் சந்திக்க அந்நாட்டுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வது எட்டு ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.

இதுபோன்ற முன்பின் முரணான நடவடிக்கைகள், போதுமான அளவு திட்டமிடாமல் அந்தந்த வேளையில் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான செயல்களில் ஈடுபடுவது போன்றவை, சீனாவுடனான போட்டியில் அமெரிக்காவை வலுவிழக்கச் செய்வதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் பங்காளிகளுக்கு எதிராக திரு டிரம்ப் காட்டிவரும் வெறுப்பு, உலகளவில் சீனாவின் நடவடிக்கைகளை முறியடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. சீனாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு, அதிக கவனம் செலுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

குறிப்புச் சொற்கள்