தொழில்நுட்பத் துணுக்குகள் [12/11/2026]

தொழில்நுட்பத் துணுக்குகள் [12/11/2026]

1 of 2
படம்: இபிஏ
படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2026 - 7:07 am

2 mins read

சிக்கலில் என்விடியா

என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளின் இலக்காக இருந்தாரா என்பது குறித்து ஆராயப்படுகிறது.

சீனாவுக்குத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் சீனத் தொழிலதிபருடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அண்மையில் தகவல் வெளியானது.ல்

கூகலின் மேம்பட்ட சில்லுகள்

கூகல் நிறுவனம் அதன் எட்டாம் தலைமுறை ‘டென்சர்’ சில்லுகளை விரிவுபடுத்துகிறது. ‘டிபியு 8டிஎக்ஸ்’, ‘டிபியு 8ஐ மேக்ஸ்’ஆகியவை அவை.

இந்தச் சில்லுகளைப் பெருநிறுவனங்கள் தங்களின் தானியங்கி செயற்கை நுண்ணறிவு ‘ஏஜெண்டு’களில் பயன்படுத்தும். இதனால் அந்த ஏஜெண்டுகள் மேகக் கணினித் தளத்தில் நேரடியாகச் செயல்பட ஆதரவளிக்கும்.

இன்ஸ்டகிராம் கட்டுப்பாடு

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் வயதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்துகிறது.

தவறான பிறந்த தேதியைப் பதிவு செய்துள்ள சிறு வயது பயனர்களைக் கண்டறிவதற்காக, மெட்டா நிறுவனம் அதன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உலகெங்கும் விரிவுபடுத்தியுள்ளது.

இதன் மூலம், பதின்ம வயதினர் தானாகவே இன்ஸ்டகிராம் தளத்தின் மிகக் கடுமையான பாதுகாப்பு, தனியுரிமை கட்டுப்பாடுகளுக்குள் வருவார்கள்.

ஆஸ்திரேலியாவின் புதிய மசோதா

ஆஸ்திரேலியாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய இணையப் பாதுகாப்பு மசோதாவால், 18 வயதுக்குட்பட்டோர் ஜிமெயில் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கலாம்.

மசோதா சட்டமாக மாறினால் இணைய நிறுவனங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க வேண்டும். இல்லையெனில் 109 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$96 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படும்.

தொடரும் ஆட்குறைப்பு

முன்னணி நிறுவனங்கள் பல தங்களது பணியாளர் கட்டமைப்பைச் சீரமைக்க முடிவு செய்துள்ளதால், தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு தொடர்கிறது. அண்மை நாள்களாக அமேசான், கேன்வா, ஸ்குவேர்ஸ்பேஸ் புளாக் ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்தது.

குறிப்புச் சொற்கள்