பேங்காக்: தாய்லாந்தின் புதிய பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குலின் நிதி அமைச்சர் வேட்பாளர்களில் அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் செத்தாபுட் சுதிவார்ட்னருபுட் முன்னணியில் இருப்பதாக தாய்லாந்து ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து வங்கியின் ஆளுநர் என்ற ஐந்தாண்டு பதவிக் காலம் செப்டம்பரில் முடிவடைகிறது. பல்வேறு அமைச்சரவைப் பொறுப்புகளுக்கு பரிசீலனையில் உள்ள ஐந்து அரசியல்வாதி அல்லாதவர்களில் திரு செதாபுட்டும் ஒருவர் என்று தாய்லாந்துச் செய்தித்தாள் தன்செட்டாகிஜ் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சில் மூத்த அதிகாரியான திரு. எக்னிட்டி நித்திதான்பிரபாஸையும் திரு அனுடினின் பூம்ஜாய்தாய் கட்சி அணுகியுள்ளதாக ‘தி ஸ்டான்டர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. வாய்ப்பை இருவரும் ஏற்கவில்லை என்றும் அது கூறியது.
அமைச்சரவை குறித்த கேள்விக்கு “எல்லாம் தயாராக இருக்கிறது” என்று திரு அனுடின் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் கூறினார்.