தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹமாஸ் விடுவித்த தாய்லாந்து நாட்டவர்கள் பேங்காக் திரும்பினர்

1 mins read
627da009-35d4-425c-8733-750c6febeba4
நாடு திரும்பிய ஐவரையும் பேங்காக் விமான நிலையத்தில் அவர்களின் உறவினர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: காஸாவில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய தாய்லாந்து விவசாயத் தொழிலாளர்களை அவர்களின் உறவினர்கள் ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.

ஓராண்டுக்கும் மேலாக பிணைக்கைதிகளாக காஸாவில் வைக்கப்பட்டு இருந்த ஐந்து தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் குழுவினர் ஜனவரி 30ஆம் தேதி விடுவித்தனர்.

காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக அந்த விடுதலை இடம்பெற்றது.

அந்த ஐவரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை 7.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் காலை 8.30) பேங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் புன்சிரிப்புடன் வந்து இறங்கினர்.

உறவினர்களோடு தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் அவர்களை வரவேற்றனர்.

ஓராண்டுக்கும் மேலாகக் காணாமல் தற்போது கண்டதால் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் ஐவரின் உறவினர்களும் வரவேற்றனர்.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிக் குழுவினர், இஸ்ரேல் வயல்வெளிகளில் வேலை செய்துகொண்டு இருந்த 31 தாய்லாந்து நாட்டவர்களைக் கடத்திச் சென்றனர்.

அவர்களில் 23 பேர் 2023ஆம் ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்டனர். இருவர் 2024 மே மாதம் இறந்துவிட்ட நிலையில், தற்போது ஐவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒருவர் மட்டும் காஸாவில் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்