வாஷிங்டன்: அதிபர் டோனல்ட் டிரம்ப், டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏப்ரல் 5ஆம் தேதி வரை தாமதப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் அச்செயலியை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டதால் கூகல் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் டிக் டாக் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
புகழ்பெற்ற குறுகிய காணொளி செயலியை 170 மில்லியன் அமெரிக்க பயனீட்டாளர்கள் பயன்படுத்தினர்.
டிக்டாக் செயலி, சீனாவைத தளமாகக் கொண்ட பைட்டான்சுக்குச் சொந்தமானது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறி அச்செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 19ஆம் தேதிக்குள் அதை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றுவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் இறுதி நாளுக்கு மறுநாளே அமலாக்கத் தடையை 75 நாள் தாமதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இது, டிக்டாக் தற்காலிகமாக அமெரிக்காவில் செயல்பட வழி வகுத்தது.
இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள கூகல், ஆப்பிள் நிறுவனங்களின் ஸ்டோர்களில் டிக் டாக் நீக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே டிக் டாக் செயலியை பயன்படுத்த அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் உறுதியளித்துள்ளதால் பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து கூகல், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து புதிய பயனீட்டாளர்கள் டிக் டாக் செயலியை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இரண்டாவது ஆக அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட செயலியாக டிக் டாக் விளங்கியது.