தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிக்டாக் விற்பனை ஏப்ரல் 5க்குள் நடைபெறும்: டிரம்ப்

1 mins read
4b4c53d3-45f7-41ba-9d1b-888b16acb10c
டிக்டாக் எனப்படும் குறுங்காணொளிச் செயலி ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் சீன நாட்டவர் தவிர வேறு ஒருவருக்கு விற்றுவிட வேண்டும், இல்லையெனில் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி தடை செய்யப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் செயலி சீன நாட்டைச் சேராத ஒருவருக்கு ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் விற்கப்பட வேண்டும்.

இல்லையேல் அதைத் தாம், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று, தடை செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை சீனர் அல்லாத ஒருவரிடம் விற்கவில்லை எனில் அது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படும் என்று ஜனவரி மாதம் கூறியிருந்தார்.

இந்தச் சட்டப்படி டிக்டாக் ஜனவரி மாதமே தடை செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில் டிரம்ப் காலக்கெடுவை ஏப்ரல் 5 வரை நீட்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிக் கூறிய டிரம்ப், “டிக்டாக் செயலியை வாங்க நிறையப் பேர் உள்ளனர்,” என்று தனது ஏர்ஃபோர்ஸ் 1 விமானத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசியபடி மார்ச் 30ஆம் தேதி கூறினார்.

“டிக்டாக் செயலி மீது நிறைய நிறுவனங்கள் அக்கறை தெரிவிக்கின்றன. டிக்டாக் செயலி உயிர்ப்புடன் இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்,” என்று விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்