தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தகப் போரால் சீனாவின் ஏற்றுமதி மெதுவடைந்தது

2 mins read
5038adcf-004f-499b-9f72-9f88be718872
மே மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும் மெதுவாக இருந்தது - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் காரணமாக சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி மெதுவடைந்துள்ளது.

மே மாதத்தில் அதன் ஏற்றுமதி எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு காரணமாக உலகளாவிய நிலையில் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருள்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

சீனாவின் இறக்குமதியும் முன்னுரைக்கப்பட்டதைவிட சரிந்தது.

உள்ளூர் பயன்பாடு பலவீனம் அடைந்ததால் சீனாவுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம், ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதி வளர்ச்சி 4.8 விழுக்காடாகப் பதிவானது.

இதற்கு மாறாக, வியட்னாமுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து உட்பட தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களும் மே மாதம் குறைந்தன.

“சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கை பேரளவில் குறைந்தது. ஆனால், மற்ற நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்பட்ட பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் மூலம் இந்த இழப்பு சரிசெய்யப்பட்டது.

“இக்காலகட்டத்தில் வர்த்தகம் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் உள்ளது,” என்று பின்பாயிண்ட் சொத்து நிர்வாக நிறுவனத்தின் தலைமைப் பொருளியல் நிபுணரான சிவேய் சாங் தெரிவித்தார்.

சீனப் பொருளியலைப் பொறுத்தவரை, பணவீக்கத்தின் முக்கிய அளவுகோலான பயனீட்டாளர் விலைக் குறியீடு மே மாதம், ஆண்டு அடிப்படையில் 0.1 விழுக்காடு குறைந்தது.

தொடர்ந்து நான்கு மாதங்களாக பயனீட்டாளர் விலைக் குறியீடு குறைந்து வந்துள்ளது.

கொவிட்-19 நெருக்கடிநிலை முடிவுக்கு வந்ததிலிருந்து சீனாவின் உள்ளூர் பயனீடு சரிந்துள்ளது.

அதை மேம்படுத்த சீனா போராடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்