மட்ரிட்: ஸ்பெயினில் நின்றுகொண்டிருந்த ரயில்மீது மோதி விபத்தை ஏற்படுத்திய ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இம்மாதம் 28ஆம் தேதி நேர்ந்த விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர்.
2013ஆம் ஆண்டுக்குப் பிறகு நேர்ந்த ஆக மோசமான விபத்தில் 64 பேரைக் காணவில்லை என்று சிவில் கார்ட் தெரிவித்தது.
விபத்தில் மாண்டோரில் 49 பேரின் சடலங்களைக் கூராய்வு செய்த அதிகாரிகள் இதுவரை ஐவரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள்.
பரிசோதனைகள் மெதுவாக நடைபெறுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய ஸ்பெயினின் உர்டா நகருக்கு அருகே நேர்ந்த விபத்துக்கு முன் அதே ரயில் பாதையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் மற்றொரு ரயில் விபத்துக்குள்ளானது.
அதை முன்னிட்டு ஸ்பெயினின் அதிவேக ரயில் கட்டமைப்பின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ரயில் விபத்து ஏற்படுவதற்குமுன் தானியக்க சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன.
அதையடுத்து மட்ரிட்டில் உள்ள மத்திய கட்டுப்பாட்டு நிலையம் நிலைமையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
