வாக்காளர் அட்டை கட்டாயம் : அமெரிக்க அதிபர் திட்டவட்டம்

1 mins read
077bbebc-c8b6-405a-baaf-1bf6e25a7a3c
தேர்தலைப் பொறுத்தமட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் வாக்குச்சீட்டு சார்ந்த முறைக்கு மாறிடவும் தொடர் அழைப்பு விடுத்து வருகிறார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இணையம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளார் அந்நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப்.

அனைத்து வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிசெய்யும் இலக்காக வாக்காளர் அட்டையைக் கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார் அதிபர் டிரம்ப்.

‘‘அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கின் பின்னால் வாக்காளர் அட்டை ஒன்று இருக்க வேண்டும். இதற்கு விதிவிலக்குகள் இல்லை! அதன் தொடர்பில் நிர்வாக உத்தரவை வெளியிடுவேன்,’’ என்று,” தமது சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார் திரு டிரம்ப்.

‘‘கடுமையாக  நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் தொலைதூரத்தில் பணியாற்றும் இராணுவத்தினரைத் தவிர, அஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறை ஏற்கப்படாது,” என்று மேலும் கூறினார் டிரம்ப்.

அமெரிக்க தேர்தல் முறை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் டிரம்ப், கடந்த 2020ம் ஆண்டில் ஜோ பைடனிடம் தான் பெற்ற தோல்வி, மோசடியினால் நிகழ்ந்த விளைவு என்று குற்றஞ்ச்சாட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே, தேர்தலைப் பொறுத்தமட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் டிரம்ப் தொடர் அழைப்பு விடுத்து வருகிறார்.

இத்தகைய முறைகளை அகற்றிவிட்டு அதற்கு மாற்றாகக் காகிதப் பயன்பாடு கொண்ட வாக்குச்சீட்டுகள், செலுத்தப்பட்ட வாக்குகளை இயந்திரங்களை விடுத்து கரங்களால் எண்ணும் முறை ஆகியவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரவும் வலியுறுத்துகிறார் திரு டிரம்ப்.

குறிப்புச் சொற்கள்