ஹூஸ்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மார்ச் 31ஆம் தேதி சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ஈரானின் மீதான கடுமையான ராணுவத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சீனா- அமெரிக்க உச்சநிலைக் கூட்டம் குறித்த மேல்விவரங்களை வெள்ளை மாளிகை வழங்கவில்லை. ஆனால், ஈரான் தாக்குதல் அதிகாரப் போட்டியை மேலும் மோசமாக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப்பின் பயணம் ஒத்திவைக்கப்படுவதற்கு அல்லது ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ஆசியா குழுமத்திற்கான (The Asia Group) சீனா நிர்வாக இயக்குநர் ஹான் லின் கூறினார்.
“பிப்ரவரி மாதத்தில், அமெரிக்க நிதியமைச்சின் உயர்மட்டக் குழு டிரம்ப் வருகை குறித்து விவாதிக்க சீனா வந்ததை அடுத்து, அதற்கு 80 விழுக்காடு வாய்ப்பு இருக்கும் எனக் கூறினேன்,” என்று ஷாங்காயில் தங்கியிருக்கும் திரு லின் கூறினார்.
“அப்போது எல்லா சமிக்ஞைகளும் நேர்மறையாக இருந்தன. இப்போது, அது கணிசமாகக் குறைந்துள்ளது,“ என்று அவர் கூறினார்.
மேலும் வெள்ளை மாளிகையில் பலர் திரு டிரம்ப் சீனா செல்லக்கூடாது என்று கூறுவதாகப் பேச்சு அடிபடுவதாகவும் அவர் சொன்னார்.
“அமெரிக்காவின் அசைவுகளைச் சீனா அணுக்கமாகக் கவனித்து வருகிறது. மேலும், ஒவ்வொரு வட்டார நெருக்கடியும் தங்களின் உலகளாவிய போட்டிக்கு ஒரு சோதனை என்பதை இரு சக்திகளும் அறிந்துள்ளன,” என்றார் அவர்.
எனினும், டிரம்ப்பின் சீனப் பயணம் இடம்பெறும் என்று முன்னாள் அமெரிக்க அரசதந்திரியான டேவிட் மீலி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பரந்த அளவிலான வெளியுறவுக் கொள்கை இலக்குகளில் கவனம் செலுத்தும் அதேவேளையில், ஈரான் நிலைமையை நிர்வகிக்கும் ஆற்றல் டிரம்ப்புக்கு உள்ளது,” என்றார் அவர்.

