தோக்கியோ: ஜப்பானின் மத்திய வட்டாரமான கிஃபுவில் உள்ள கேக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு (செப்டம்பர் 5) தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை கூறியது.
மோட்டோசுவில் உள்ள கட்டடத்தில் இருந்த ஒருவர், அங்கு கத்திக் குத்துச் சம்பவம் நடந்திருப்பதாகவும், யாரோ ஒருவர் பெட்ரோலை ஊற்றியதாகவும் இரவு சுமார் 9 மணிக்கு அவசர அழைப்பு மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் கடையின் வேலை நேரத்தையும் தாண்டி நடந்துள்ளது.
திட்டமிட்டு தீவைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் இந்தச் சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குடியிருப்புகளையும் உள்ளடக்கிய இரண்டு மாடிக் கட்டடத்தில் இந்த கேக் கடை செயல்பட்டு வருகிறது.


