சாபாவில் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகளைப் பிரிக்கும் இரு அறுவை சிகிச்சைகள் வெற்றி

சாபாவில் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகளைப் பிரிக்கும் இரு அறுவை சிகிச்சைகள் வெற்றி

மூன்று மாதங்களில் இரண்டு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்தன
மாதிரிப் படம்: லைன் & ரூட்ஸ் ஃபோட்டோகிராஃபி

12 Nov 2026 - 11:10 am

1 mins read

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் குறைப்பிரசவத்தில் கீழ்முதுகுப் பகுதியில் ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சாபா மகளிர், சிறார் மருத்துவமனையில் அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது, அந்த மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட, ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகளைப் பிரிக்கும் இரண்டாவது அறுவை சிகிச்சையாகும்.

அதிக அபாயங்களைக் கொண்ட இந்த அறுவை சிகிச்சை கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்பு ஜூலை மாதம் 2ஆம் தேதியும் சாபாவில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைப் பிறவிகள் பிரிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்