தோக்கியோவில் மனித இயந்திர விநியோகங்களைத் தொடங்கும் ‘உபர் ஈட்ஸ்’

தோக்கியோ சாலைகளில், “கவனம்: இயந்திர மனிதன்” என்று சுயமாகச் செல்லும் பச்சை நிற விநியோக இயந்திர மனிதர்கள் கூறுவதைக் கேட்கலாம்.

மார்ச் 6ஆம் தேதி முதல், இயந்திர மனிதர்கள் செய்யும் விநியோகங்கள் தோக்கியோவில் சிறிய பகுதியில் வழங்கப்படும். அமெரிக்காவில் தளம் கொண்டுள்ள ‘உபர் ஈட்ஸ்’ உணவுச் செயலி, அந்தச் சேவையை ஜப்பானில் மேலும் பரவலாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறது.

பொதுத் தெருக்களில் விநியோகம் செய்யும் இயந்திர மனிதர்களை அனுமதிப்பதற்காக தற்போது தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் ஜப்பான், 2023ல் போக்குவரத்துச் சட்டங்களை மாற்றியது.

‘பானசோனிக்’ போன்ற மற்ற நிறுவனங்களும் பொருள்களை விநியோகிப்பதற்கு புதிய இயந்திரங்களை முன்னோடித் திட்டமாகப் பயன்படுத்தி பார்க்கின்றன.

செயலிப் பயனீட்டாளர்கள் உணவை விநியோகிக்கும் இயந்திர மனிதருக்காக வெளியில் வந்து காத்திருக்கவேண்டும். இருப்பினும், ஒரு நாள் அது கதவு வரை வந்து நிற்கக்கூடும் என்று ‘உபர் ஈட்ஸ்’ன் நிர்வாகி ஆல்வின் ஊ, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இந்தச் சேவை ஒரு நாள் புறநகர்ப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படலாம் என்றார் அவர். அந்தப் பகுதிகளில் பல மூத்தோர் இருக்கின்றனர் என்றும் ஓட்டுநர்களைக் காண்பது அரிது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய ஓட்டுநர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் திரு ஊ சொன்னார். ஐந்து அல்லது பத்தாண்டுகளில்கூட, இந்தத் தளத்தில் மனித விநியோகிப்பாளர்களுக்கு எப்போதுமே வேலை இருக்கும் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!