‌‌ஷங்ரிலா கலந்துரையாடல்: சிங்கப்பூரில் ஸெலென்ஸ்கி

1 mins read
d81fe7dc-1b7b-4b3b-a3aa-ff85710db4ce
‌ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்க சிங்கப்பூர் வந்துள்ள உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (நடுவில்). - படம்: இபிஏ

ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்க உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி, சிங்கப்பூர் வந்துள்ளார்.

சனிக்கிழமையன்று (ஜூன் 1) திரு ஸெலென்ஸ்கி சிங்கப்பூர் வந்தடைந்தார். ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 2) அவர் ‌ஷங்ரிலா கலந்துரையாடலில் உரையாற்றுவார்.

உக்ரேன் மீது ர‌ஷ்யா படையெடுத்து ஈராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவர் தனது நாட்டுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதனையொட்டி திரு ஸெலென்ஸ்கி ‌ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

அண்மைக் காலமாக உக்ரேன் மீதான ர‌ஷ்யாவின் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

‘உலக அமைதிக்கும் வட்டார நிலைத்தன்மைக்கும் புதிய தீர்வுகளை வரைதல்’ (ரீ-இமேஜினிங் சொலுஷன்ஸ் ஃபார் குளோபல் பீஸ் ஆண்ட் ரீஜனல் ஸ்டபிலிட்டி) எனும் தலைப்பைக் கொண்ட அமர்வில் திரு ஸெலென்ஸ்கி உரையாற்றுவார் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தினர். அந்த அமர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கும்.

அதே அமர்வில் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், மலேசிய தற்காப்பு அமைச்சர் முகம்மது கலெட் நோர்டின் ஆகியோரும் உரையாற்றுவர்.

சீனத் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன் தலைமையிலான அந்நாட்டைப் பிரதிநிதிக்கும் குழுவினரையும் திரு ஸெலென்ஸ்கி சந்திப்பார் என தகவல் தெரிந்த ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்