அமெரிக்கத் தேர்தல்: பெண்கள், சிறுபான்மையினர் வரலாற்று வெற்றி

அமெரிக்கத் தேர்தல்: பெண்கள், சிறுபான்மையினர் வரலாற்று வெற்றி

படம்: ராய்ட்டர்ஸ்

05 Nov 2026 - 7:02 pm

2 mins read

சிகாகோ: அமெரிக்க இடைத் தவணைத் தேர்தலில் பெண்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

இது அமெரிக்க அரசியலில் பன்முகத்தன்மைக்குக் கிடைத்த மாபெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் முதமுதலாக கருப்பின பெண் ஒருவர் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜார்ஜியா மாகாண ஆளுநர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், தமது வெற்றி மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் முதமுதலாக கருப்பின பெண் ஒருவர் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜார்ஜியா மாகாண ஆளுநர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், தமது வெற்றி மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

முதல் கறுப்பினப் பெண் ஆளுநர், அவைத் தலைவர்

ஜார்ஜியாவில் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் அந்நாட்டின் முதல் கறுப்பினப் பெண் ஆளுநரானார். விஸ்கான்சினில் டேவிட் க்ரௌலியும், ஃபுளோரிடாவில் குடியரசுக் கட்சி சார்பில் பைரன் டொனால்ட்சும் முதல் கறுப்பின ஆளுநர்களாகத் தேர்வாகினர். மேரிலாந்தின் வெஸ் மூரையும் சேர்த்து ஒரே நேரத்தில் மூன்று கறுப்பின ஆளுநர்கள் பதவியில் இருப்பர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ள சூழலில், ஹகீம் ஜெஃப்ரீஸ் பிரதிநிதிகள் அவையின் முதல் கறுப்பின அவைத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

மிச்சிகனில் அப்துல் எல்-சையத் முதல் முஸ்லிம் செனட்டராகவும், நியூ ஹாம்ப்ஷயரில் கிறிஸ் பாப்பாஸ் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் செனட்டராகவும் வென்றனர்.

நியூ மெக்சிகோ மாநில ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்ற டெப் ஹாலண்ட் லாகுனா புவெப்லோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 2018ல் அமெரிக்கக் காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு பழங்குடியின அமெரிக்கப் பெண்களில் ஒருவரான இவர்,  
 ஜோ பைடன் அரசில், அமெரிக்க அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பழங்குடியின அமெரிக்கர் என்ற பெருமையையும் பெற்றார்.
நியூ மெக்சிகோ மாநில ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்ற டெப் ஹாலண்ட் லாகுனா புவெப்லோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 2018ல் அமெரிக்கக் காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு பழங்குடியின அமெரிக்கப் பெண்களில் ஒருவரான இவர், ஜோ பைடன் அரசில், அமெரிக்க அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பழங்குடியின அமெரிக்கர் என்ற பெருமையையும் பெற்றார். - படம்: வோக்

டெக்சாசில் 31 ஆண்டுகாலக் குடியரசுக் கட்சி ஆதிக்கத்தை வீழ்த்தி, முதல் லத்தீனோ ஆளுநராக ஜினா ஹினோஜோசா தேர்வானார். கலிபோர்னியாவின் முதல் லத்தீனோ ஆளுநராக சேவியர் பெசெர்ராவும், நியூ மெக்சிகோவில் முதல் பழங்குடியினப் பெண் ஆளுநராக டெப் ஹாலண்டும், ஓஹியோவில் முதல் பெண் ஆளுநராக டாக்டர் ஏமி ஆக்டனும் வென்றனர்.

கொலராடோவில் 29 வயது மெலட் கிராஸ் முதல் கறுப்பினப் பெண் எம்பி, இளம் 'ஜென்-இசட்' எம்பியாகவும், நியூயார்க்கில் கிளேர் வால்டெஸ் முதல் பழங்குடியினப் பெண் எம்பியாகவும் தேர்வாகினர்.

ஈரான் போர், வரிக் கொள்கைகள், குடியேற்றக் கெடுபிடிகள், அத்தியாவசிய வாழ்க்கைச் செலவின உயர்வு ஆகியவையே ஆளும் குடியரசுக் கட்சியின் படுதோல்விக்குக் காரணமாக அமைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், மூத்த தலைவர்களுக்கும் இளம் உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே புதிய தலைவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்