சீனாவின் சில்லுகளுக்கான வரியை ஒத்திவைக்கும் அமெரிக்கா

1 mins read
58b9f18c-65d3-4f49-be95-426a4e7de938
பகுதி மின்கடத்தி சில் உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக அமெரிக்கா வரும் ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் சீனாவின் பகுதி மின்கடத்தி சில்லுகளுக்கான வரியை 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.

பகுதி மின்கடத்தி சில்லு உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக அமெரிக்கா வரும் ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் சில்லுகளுக்கு எதிரான புதிய வரிவிதிப்பைக் குறைந்தது 30 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

“சீனா பகுதி மின்கடத்தி துறையில் தனியாளாக ஆதிக்கத்தை மேற்கொள்கிறது. இது சரி அல்ல. சீனாவின் செயல் அமெரிக்காவின் வர்த்தகத்தைப் பாதிக்கும் அல்லது சுமையாக மாறக்கூடும். அதனால் தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியம்,” என்று அமெரிக்க வர்த்தக அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு திட்டத்தை வா‌ஷிங்டனில் உள்ள சீனாவின் தூதரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது,

“வர்த்தக நடவடிக்கைகளை அரசியலாக்கினால் உலக வர்த்தகம் பாதிக்கப்படும்,” என்று அது கூறியது. சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம் என்றும் சீனத் தூதரகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்