அமெரிக்காவில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் பெரிதளவில் முயற்சித்த நிலையில் அதற்கான ஆதரவு அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் டிரம்ப் பதவியேற்று ஆறுமாதங்கள் ஆகியுள்ள நிலையில், குடியேறிகளை நாடுகடத்த அவர் நிர்வாகம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு இடையே இத்தகவல் வந்துசேர்ந்துள்ளது.
இதற்கிடையே. ‘கேலப்’ கருத்துக்கணிப்பு அமைப்பின்படி டிரம்பின் கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், அமெரிக்கர்கள் அந்த அம்சத்தை ஆதரிப்பதும், குறிப்பாக 79 விழுக்காட்டு அமெரிக்கர்கள் குடியேற்றத்தை நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒரு விஷயமாகக் கருதுவதாகவும் ஆய்வின் முடிவு சுட்டியது.
இதுவே, கடந்த ஆண்டு 64 விழுக்காடாக இருந்தது.
மேலும் இது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஆக அதிகமான விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பெரும்பாலானோரை நாடு கடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு 47 விழுக்காடு அமெரிக்கர்கள் நினைத்திருந்த வேளையில், அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த எண்ணமும் மாறிப்போயுள்ளது தெரியவந்துள்ளது.
‘கேலப்பின்’ தற்போதைய ஆய்வின்படி குடியேறிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்கான ஆதரவு 38 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், 62 விழுக்காடு அமெரிக்கர்கள் குடியேற்றம் சார்ந்த கொள்கைகளை அதிபர் டிரம்ப் கையாளும் விதத்தை ஏற்கவில்லை என்றும் ஆய்வு கூறியது.
முறையான ஆவணங்களின்றி குடியுரிமை பெறுவதற்கான முயற்சியில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான ஆதரவும் அதிகரித்துள்ளது என்றும் ஆய்வு தெரிவித்தது. அதன்படி, 78 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இந்த அணுகுமுறையை ஆதரிப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

