உச்சம் தொட்ட வியட்னாமின் டுரியான் பழ ஏற்றுமதி

1 mins read
2e3cda2c-b982-46a9-b1c3-507385ea0df4
வியட்னாமின் மொத்த விவசாய ஏற்றுமதியில் டுரியான் பழம் ஆக அதிக பங்கு வகித்தது. - படம்: வியட்னாம் நியூஸ்/ASIA NEWS NETWORK

ஹனொய்: வியாட்னாம் இவ்வாண்டின் முதல் 10மாதங்களில் செய்துள்ள ஏற்றுமதியில் டுரியான் பழம் வரலாறு படைத்துள்ளது.

கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் அந்தப் பழத்தின் ஏற்றுமதி 10.4 விழுக்காடு அதிகரித்து, S$4.3 பில்லியன் (US$3.33 பில்லியன்) மதிப்பை எட்டியுள்ளது. வியட்னாமின் சுங்கத்துறை வழங்கிய தரவுகள் இதனைக் குறிப்பிட்டுள்ளன. அந்நாட்டு விவசாயத் துறை ஏற்றுமதியில் ஆக அதிக வருவாயை டுரியான் ஈட்டியுள்ளது.

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டுரியான்களின் மொத்த விகிதம் 94.35 விழுக்காடு ஆகும். அதன் விற்பனை மதிப்பு S$4.24 பில்லியன் என கணிக்கப்படுகிறது. சீனச் சந்தைக்குக்கான ஏற்றுமதி, வியட்னாமின் வரலாற்று சாதனைக்கு முக்கிய காரணம்.

அக்டோபர் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட இதர பொருள்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும் டுரியான் ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாத டுரியான் ஏற்றுமதி S$738 மில்லியனை எட்டியது. அது கடந்த ஆண்டைவிட 2.7 மடங்கு அதிகமாகும்.

வியட்னாமில் இருந்து சீனாவை அடைய கப்பல்கள் எடுத்துக்கொள்ளும் நேர அளவு, டுரியானின் நிர்ணயிக்கப்பட்ட விலை ஆகியன வியட்னாமுக்கு சாதகமாக அமைந்துள்ளன. தாய்லாந்துக்கு அடுத்தபடியாக, சீனச் சந்தைக்கான ஏற்றுமதியில் வியட்னாமியப் பழங்கள் பிரபலமாக விளங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்