தாய்லாந்துக்கு வனவிலங்குக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

தாய்லாந்துக்கு வனவிலங்குக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

2 mins read
நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் மீட்பு
3c4bf236-398a-464a-8b73-6e016781b5c7
கிழக்கு கலிமந்தானில் உள்ள வனவிலங்குகளில் மனிதக் குரங்கும் அடங்கும். - படம்: தி நேச்சர் கன்சர்வன்சி

மேடான்: மனிதக் குரங்கு உட்பட நூற்றுக்கணக்கான பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளைத் தாய்லாந்துக்குக் கடத்த முற்பட்ட வழக்கில், சுமத்ரா வனத்துறைச் சட்ட அமலாக்க அமைப்பு ஒருவரைச் சந்தேக நபராக பெயரிட்டுள்ளது.

‘ஏஎஸ்’ என அடையாளப்படுத்தப்பட்ட அந்த நபர், அச்சே மாநிலத்தின் வடக்கு அச்சே பகுதியைச் சேர்ந்தவர். அவர் தற்போது அச்சே காவல்துறை தடுப்புக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில், விசாரணையாளர்களால் நூற்றுக்கணக்கான விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில், ஒரு மனிதக் குரங்கும் மூன்று கிழக்கு ஜாவா லங்கூர் குரங்கு வகைகளும் வட சுமத்ராவிலுள்ள சிபோலாங்கிட் விலங்கு மீட்பு நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றன.

அனைத்துலகக் கடத்தல் கும்பல் பின்னணி

விலங்குக் கடத்தல் கும்பலை ஒடுக்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக ஏஎஸ் அமைந்ததாக வனத்துறை அமைச்சின் வனச் சட்ட அமலாக்கத் தலைமை இயக்குநர் துவி ஜானுவாண்டோ நுக்ரோஹோ தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஓர் ஒருங்கிணைந்த அனைத்துலகக் குற்றச் கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகத் திரு துவி கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளின் விவரங்கள்

இதற்கிடையே, சந்தேக நபர் ஏஎஸ் மொத்தம் 53 கூண்டுகளில் பாதுகாக்கப்பட்ட விலங்குகளைக் கடத்த முற்பட்டார் என்றும் அவற்றில் பெரும்பாலானவை பறவைகள் என்றும் சுமத்ரா வனத்துறைச் சட்ட அமலாக்க அமைப்புத் தலைவர் ஹரி நோவியாண்டோ குறிப்பிட்டார்.

மேலும் சோதனையில் பின்வருவனவும் கண்டறியப்பட்டன:

* புலியுடையது என நம்பப்படும் ஒரு முழு எலும்புக்கூடு.

* 30 பொட்டலங்களில் உறைந்த நிலையில் இருந்த கடல் நண்டுகள்.

* ஒரு சாக்கு நிறைய பாம்புகள்.

கடத்தல் முறியடிப்பு

சந்தேக நபர் ஏஎஸ், இந்தப் பாதுகாக்கப்பட்ட விலங்குகளை அச்சேயின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு துறைமுகம் வழியாகக் கடத்த முற்பட்டதாகத் திரு ஹரி தெரிவித்தார். ஜனவரி 30ஆம் தேதி கூட்டுப்படை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்