மொழிபெயர்ப்பு என்பது சமூக அடையாளம்: எல்ஷடாய்

மொழிபெயர்ப்பு என்பது சமூக அடையாளம்: எல்ஷடாய்

3 mins read
5dd0dbfb-4e9c-4ceb-a316-e7b8b30b50c4
எல்ஷடாய் ஜீவநதி .வி. - படம்: தேசிய மொழிபெயர்ப்புக் குழு

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியின் சொல்லுக்கு மற்றொரு மொழியில் பொருள் கொள்வது மட்டுமல்ல, அது அச்சொல்லின் பண்பாட்டையும் விளக்குவது. மொழி சமூகத்தின் அடையாளம்.

எனவே மொழி பெயர்க்கும்போது, அதன் பொருளையும் பண்பாட்டையும் பதிவுசெய்வது அவசியம் என்பது ‘ஃபெய் யுவே சமூக சேவைகள்’ அமைப்பில் துணை சமூக சேவையாளரான குமாரி. எல்ஷடாய் ஜீவநதி .வி. முன்வைக்கும் கருத்து.

அண்மையில் நடைபெற்ற தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில், “சமூகத் துறையில் மொழிபெயர்ப்பின் பங்கு” எனும் தலைப்பில் உரையாற்றினார் குமாரி எல்ஷடாய் (23).

தமிழ் என்னுடைய மொழி, என் அடையாளம். ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்குத் தாய்மொழி மூலமாக உதவிக்கரம் நீட்டும்போது மொழிபெயர்ப்பு எனும் இச்சேவையை உற்சாகத்துடன் வழங்க  முடிகிறது,” என்று குறிப்பிட்டார்  குமாரி எல்ஷடாய்.

இளையராக இருப்பதால் மூத்தோர், பெற்றோர் உள்ளிட்டவர்களுக்காக மொழிபெயர்ப்பு செய்யும்போது அவர்களின் நம்பிக்கையை வெல்வது சவால் மிகுந்தது என்றார் அவர்.

“எனினும் அத்திறன் வார்த்தையை மாற்றுவது மட்டுமல்ல, தொனியையும், பாணியையும் உள்ளடக்கியது; சொல்வளம் சார்ந்தது என்பதை உணர்ந்து பணிவன்புடன் செயல்பட்டால், மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும்,” என்று தெரிவித்தார்.

சமூக சேவை எனும் வாழ்க்கைத் தொழிலில் இணைந்து மூன்றாண்டு ஆகியுள்ள நிலையில், நேரத்தைச் சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்களைச் சந்திக்க தயங்குவதில்லை என்று கூறினார் இந்த இளையர். 

“சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பகுதிநேர மாணவி[Ϟ]யாகப் படிப்பையும் தொடர்கிறேன். படிப்பே என் வேலையாகவும், நான் செய்யும் வேலையே வகுப்பில் நான் பயிலும் கல்வியாகவும் இருப்பதால் நீண்டநேர உழைப்பு சலிப்பைத் தருவதில்லை,” என்று விளக்கினார் குமாரி எல்ஷடாய்.

சமூக சேவையையும் சமுதாயத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு மொழிச் சேவையையும் வழங்குவது  இவரது இலட்சியம்.  சமூக சேவை சார்ந்த சேவைகளை அணுகுவதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பது இவரின் எதிர்பார்ப்பு. 

இரண்டு ஆண்டுகளாகக் குடிமக்கள் மொழிபெயர்ப்பாளராக இருப்பதாகச் சொன்ன குமாரி எல்ஷடாய், மொழியால் மக்களை ஒன்றிணைக்க சமுதாயத்தில், சமூகச் சேவையில் அதனை முக்கியக் கருவியாக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைப் பகிர்ந்துகொள்ள, மேற்கூறிய கருத்தரங்கில் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.

மொழிபெயர்ப்பில் இளையர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்ற கருத்தை தமது உரையின்போது முன்வைத்தார் குமாரி எல்ஷடாய்.

“மொழிபெயர்ப்பின் வழியாகத் தமிழ்ச் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் இளந்[Ϟ]தலை[Ϟ]முறையினர், அருகிலுள்ள குடும்ப சேவை நிலையத்தை அணுகலாம்.

“தொண்டூழியத்தில் தமிழ்மொழி சார்ந்த தேவையும் உண்டு. எனவே அது தொடர்பான வாய்ப்புகளை அறிந்துகொண்டு சமூகத்திற்குப் பங்களிக்க மொழிபெயர்ப்பு, இளையர்களுக்குப் பெரும் பாலமாகத் திகழக்கூடும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் குமாரி எல்ஷடாய்.

“பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி, ஓர் இனம் எனத் தனித்துவமிக்க அடையாளங்கள் உள்ளன.

மொழிபெயர்ப்பு அதனை மேலும் வலுவாக்குகிறது,” என்ற இந்த இளையர், “மொழியை வளப்படுத்தவும் வளர்க்கவும்  மொழிபெயர்ப்பு உதவுகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்