நூல் வெளியீடு: சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

நூல் வெளியீடு: சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

முனைவர் கோட்டி திருமுருகானந்தம் எழுதியுள்ளார்
சித்திரிப்பு: பிக்சாபே

02 Oct 2026 - 7:23 pm

1 mins read

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தேசிய நூலகத்தின் ஆதரவோடு நடத்தும் முனைவர் கோட்டி திருமுருகானந்தம் எழுதிய சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் எனும் நூல், சனிக்கிழமை (அக்டோபர் 3) மாலை 6.00 மணிக்கு வெளியீடு காண்கிறது.

எண் 100, விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16வது தளத்தில் அமைந்துள்ள ‘த பாட்’ அரங்கில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சரும் தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்ற மேயருமான தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞரான முனைவர் சுப.திண்ணப்பன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றுவார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன் வாழ்த்துரை வழங்குவார்.

முனைவர் கோட்டி திருமுருகானந்தத்தின் பல்லாண்டுகால அர்ப்பணிப்புமிக்க உழைப்பின் பயனாக வெளிவரும் இந்நூல், சிங்கப்பூர் இலக்கியத் தடத்தில் கவிதைகளின் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அறிய விரும்பும் ஆர்வலர்களுக்குச் சிறந்த ஆவணமாகத் திகழும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்