தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதைக்களத்தில் முருகு சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு நினைவலைகள்

2 mins read
4e99270f-a0d9-431d-9c40-b3e30b9c6da9
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 120ஆவது கதைக்களத்தில் எழுத்தாளர், படத் தயாரிப்பாளர் மில்லத் எழுதிய ‘சிங்கப்பூரில் சரவணன்’ எனும் குறுநாவலின் அறிமுகம் இடம்பெறவிருக்கிறது. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களத்தில் பேராசிரியர் அ.வீரமணி ‘முருகு சுப்பிரமணியம் நூற்றாண்டில் அவரது நினைவலைகள்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெறகிது.

உள்ளூர்ப் படைப்புகளின் ‘நூல் அறிமுகம்’ அங்கத்தில் எழுத்தாளர், படத் தயாரிப்பாளர் மில்லத் எழுதிய ‘சிங்கப்பூரில் சரவணன்’ எனும் குறுநாவல் இடம்பெறுகிறது. திருவாட்டி எழிலி கருணாகரன் அறிமுகவுரை ஆற்றுவார்.

போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். அடுத்த மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகம் எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

மூன்று பிரிவுகளாக நடைபெறும் ஜூலை மாதச் சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்:

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

“எப்போதுமே செயற்கை நுண்ணறிவு கைகொடுக்காது என்பது இப்போதாவது உனக்குப் புரிந்ததா?” குரல் உயர்ந்தது.

இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

“எங்குத் தேடியும் கால்கள் கிடைக்கவேயில்லை”.

பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

”கண்காணிப்புக் கருவியில் பதிவாகியிருந்ததை நம்பவியலாமல் பார்த்தேன்”

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 28.06.2024 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ பிரதீபா வீரபாண்டியன் – 8142 0220 / பிரேமா மகாலிங்கம் – 9169 6996

குறிப்புச் சொற்கள்