கதைக்களம்: பாலபாஸ்கரனின் ‘சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ணபூமி’ நூல் அறிமுகம்

கதைக்களம்: பாலபாஸ்கரனின் ‘சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ணபூமி’ நூல் அறிமுகம்

படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

01 Nov 2026 - 6:43 am

2 mins read

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 148வது கதைக்களம் நிகழ்ச்சி தேசிய நூலகக் கட்டடத்தின் 5ஆம் தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) நடைபெறவுள்ளது.

உள்ளூர்ப் படைப்புகள் குறித்து நடைபெறும் நூல் கலந்துரையாடல் அங்கத்தில் நினைவில் வாழும் எழுத்தாளர் பாலபாஸ்கரனின் ‘சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ணபூமி’ நூல் அறிமுகம் இடம்பெறுகிறது. 

நூலின் அறிமுகத்தை எழுத்தாளர் வித்யா அருண் வழங்கவுள்ளார். ‘சிங்கப்பூர் வரலாற்றின் நிழலுருக்கள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் ஷாநவாஸ் சிற்றுரை நிகழ்த்தவிருக்கிறார்.

‘இதயத்தில் நின்றவை’ அங்கத்தில் வாசகர்கள் தங்கள் மனத்தில் நிலைத்திருக்கும் புனைவுகள் குறித்து உரையாற்றுவர். மேலும், கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். 

நூல் அறிமுகப் போட்டிக்கு சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

சிறுகதைப் போட்டிக்கான தொடக்கவரிகள்

உயர்நிலைப்பள்ளி மாணவர்க்கான தொடக்க வரி- ‘என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிக வித்தியாசமான மனிதர் அவர்தான்’. 200-300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

இளையர்களுக்கான பிரிவில் ‘நள்ளிரவில் வந்த அந்த ஒரு குறுஞ்செய்தி, என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது’ என்ற வரியுடன் தொடங்கி 300-400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

பொதுப்பிரிவில் ‘பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஓர் உண்மை இன்று வெளிவரப்போகிறது’ என்ற வரியுடன் தொடங்கி 400-500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

படைப்புகளை 27.11.2026 ஆம் தேதிக்குள் https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக அனுப்ப வேண்டும். 

மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16  என்ற இணையத்தளத்தை நாடலாம்.

திருவாட்டி மணிமாலா மதியழகன் - 8725 8701 / திருவாட்டி பிரேமா மகாலிங்கம் - 9169 6996 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். 

குறிப்புச் சொற்கள்