கரீம்நகர் (தெலுங்கானா): தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்தில் ஆளும் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மரு கங்கா ரெட்டி செவ்வாய்க்கிழமை காலை (அக்டோபர் 22) அடையாளம் தெரியாதவர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
ஜக்தியால் மாவட்டம், ஜபிதாபூர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 56 வயது மரு கங்கா ரெட்டி மீது கார் மோதியது.
அவர் கீழே விழுந்ததும், காரில் இருந்து இறங்கிய ஒருவர் அவரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த கங்கா ரெட்டியை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடல் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இறந்தவர் எம்எல்சி ஜீவன் ரெட்டியின் நெருங்கிய நண்பர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கும் இறந்தவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கின்றது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.