ராமநாதபுரம்: அம்பாசமுத்திர இடைத்தேர்தலில் திமுகவின் ஆதரவை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
சீமானுக்கு ஆதரவு அளிப்பது பற்றிய முடிவு தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எடுக்கப்படும் என்று திரு ஸ்டாலின் முன்னர் கூறியிருந்தார்.
அதுகுறித்து கருத்துரைத்த சீமான், திமுகவின் பெருந்தன்மையை வரவேற்கிறார் என்றும் சட்டசபைக்குள் தம்மை அனுப்பினால் 234 தொகுதிகளிலும் அம்பாசமுத்திரத்தைத் தலைசிறந்த தொகுதியாக மாற்றிக்காட்ட முடியும் என்றும் சூளுரைத்தார்.
“எப்படி வேலை செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஈரோட்டில் இருந்ததைப் போல இங்கும் போட்டி இருக்க வேண்டும். அதுபோன்ற முடிவை எடுத்தால் நான் மகிழ்ச்சியோடு ஏற்பேன்,” என்றார் சீமான்.
சட்டசபையில் தமது குரல் எதிரொலிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதாக மேலும் கூறிய அவர், அதன் அடிப்படையில் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டார்.
“திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் அதை ஏற்காமல் இருப்பேனா? பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுப்பதை வேண்டாம் என்று சொல்ல முடியுமா? நான் ஒரு லட்சியவாதி. ஆதரவளிப்பதை கூட்டணியாகப் பார்க்கக் கூடாது,” என்றும் சீமான் கூறினார்.
