தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: சிஜேபி திட்டவட்டம்

தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: சிஜேபி திட்டவட்டம்

கோப்புப் படம்: டெக்கான் குரோனிக்கல்

21 Oct 2026 - 5:31 pm

1 mins read

புதுடெல்லி: தீபாவளிப் பண்டிகை காலம் வரவிருப்பதால் அதுவரை எந்தவிதப் போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே தனது தொண்டர்கள், ஆதரவாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக அண்மையில் சிஜேபியும் மற்ற எதிர்க்கட்சிகளும் நடத்திய போராட்டங்களின்போது காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அபிஜித் திப்கே கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார். இத்தகைய சூழலில், தனது ஆதரவாளர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிகழ்வுகளால் சிஜேபியினரின் குடும்பத்தார் மிகவும் கவலையடைந்திருப்பார்கள் என்றும் எனவே, தொண்டர்கள் அனைவரும் இந்தப் பண்டிகைக் காலத்தை தங்கள் குடும்பத்தினருடனும் அன்பிற்குரியவர்களுடனும் மகிழ்ச்சியாகச் செலவிட வேண்டும் என்றும் அபிஜித் திப்கே கேட்டுக்கொண்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை முடியும் வரை சிஜேபி சார்பில் எந்தவிதப் போராட்டங்களும் நடத்தப்பட மாட்டாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது வெறுப்புணர்வுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அத்தகைய வெறுப்புணர்வு சிஜேபியினர் மனத்திலும் நமக்குள்ளும் நுழைந்துவிடக் கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

“நாம் கவனமாக இருக்க வேண்டும். நம்மை வெறுப்பவர்களைப் போல நாமும் மாறிவிடக் கூடாது. ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும் கருணையுமே நமது உண்மையான பலம்,” என்று திரு அபிஜித் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்