45வது ‘தமிழர் திருநாள்’ விழா

1 mins read
dd4bc5b1-5a92-42f9-9828-302d0a522a88
தொடர்ந்து 45 ஆண்டுகளாகச் சிங்கப்பூர்த் தமிழர்களை ஒருங்கிணைத்து ‘தமிழர் திருநாள்’ விழாவை நடத்திய டாக்டர் என்.ஆர். கோவிந்தனைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.  - படம்: மாதவி இலக்கிய மன்றம்

சிங்கப்பூரில் மாதவி இலக்கிய மன்றம் சார்பில் 45வது தமிழர் திருநாள் விழா, உமறுப்புலவர் தமிழ் மொழி அரங்கில்‌ டாக்டர் என்.ஆர். கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங்கும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.தினகரனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில், மாதவி இலக்கிய மன்றச் சுவடுகள், தமிழ் மற்றும் தமிழரின் சிறப்புகளை கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறுவர் சிறுமியர் காட்சிப்படுத்தினர்.

பாரம்பரியத் தமிழர் கலைகளை மீட்டெடுக்கும் விதமாக மன்னை ராஜகோபாலன் முன்னின்று நடத்திய லாவணி எசப்பாட்டு, கும்மி, ஒயிலாட்டம், மாணவ மாணவியரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

கடந்த 45 ஆண்டுகளாக மாதவி இலக்கிய மன்றத்திற்குத் தலைமையேற்று, ஒவ்வோர் ஆண்டும் தமிழர் திருநாள் விழாவை சிறப்புற நடத்தி வந்த டாக்டர் என்.ஆர். கோவிந்தன், இனி வரும் ஆண்டுகளில் அந்த விழாவைத் திருவாட்டி சித்ரா மெய்யப்பன் தலைமையேற்று நடத்துவார் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்