யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘பயணங்களும் பாடங்களும்’ நூல் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
சிங்கப்பூர் இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த பத்துத் தலைவர்களின் கதையை இந்நூல் விவரிக்கிறது.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயண மிஷனின் ஆதரவுடன் நடைபெறும் நூல் வெளியீட்டு நிகழ்வு 69, பாலஸ்டியர் சாலையில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
மொத்தம் 300 பக்கங்களைக் கொண்ட இந்நூல் வெளியீடு மூலம் திரட்டப்படும் எல்லா நிதியும் ஸ்ரீ நாராயண மிஷனுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.