எஸ்ஜி 60: தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்களின் நூல் விற்பனை

1 mins read
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நூல்களைத் திரட்டத் திட்டமிடுகிறது
62f509d1-5148-4fd1-9ac9-3848bb79d32f
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், ‘எஸ்ஜி 60 தமிழ்ப் புத்தகத் திருவிழா’  - சித்திரிப்பு: பிக்சாபே

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் மே 9,10,11ஆகிய நாள்களில் ‘எஸ்ஜி 60 தமிழ்ப் புத்தகத் திருவிழா’ நடைபெறவுள்ளது.

இதற்காகக் கழகம் அமைக்கவிருக்கும் கூடத்தில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைப் புத்தகக் காட்சிக்கு கடந்த ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் திரட்டியதுபோல் எழுத்தாளர்களின் நூல்களை அது திரட்ட எண்ணியுள்ளது.

சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் தங்கள் நூல்களை விற்பனைக்கு வழங்கலாம்.

நூல்கள் அனைத்தும் 10 விழுக்காட்டுக் கழிவு விலையில் விற்கப்படும்.

நூல் விற்ற தொகை எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். விற்பனையாகாத நூல்கள் திருப்பிக் கொடுக்கப்படும்.

கவிதை தவிர்த்த மற்ற நூல்களை (சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம்) எழுத்தாளர்கள் வழங்கலாம். ஒவ்வொரு நூலிலும் ஐந்து படிகள் வழங்க வேண்டும்.

நூல்களை ஆர்யா கிரியேஷன்ஸ், 32, அப்பர் டிக்சன் சாலை, சிங்கப்பூர் 207491 என்னும் முகவரியில், கழகத்தின் செயலாளர் பிரேமா மகாலிங்கத்திடம் மே மாதம் 1ஆம் தேதிக்குள் கொடுக்கலாம்.

கவிதை நூல்களை 91461400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பாவிடம் வழங்கலாம்.

‘எஸ்ஜி60 தமிழ்ப் புத்தகத் திருவிழாவில்’ நூல்களை வெளியிடும் திட்டமும் உள்ளது. எழுத்தாளர்கள் தாங்கள் வெளியிடவிருக்கும் நூல்கள் பற்றிய விவரங்களுடன் திருவாட்டி பிரேமாவை 91696996 என்ற எண்ணில் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்