சொல்லாடும் முன்றில் இரண்டாம் ஆண்டுவிழா

1 mins read
b84af9e0-7895-4b91-89a2-caceecdce775
எழுத்தாளர் பாக்கியம் சங்கர். - படம்: சொல்லாடும் முன்றில்

ஜூரோங் வட்டாரத் தமிழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்டு இயங்கிவரும் சொல்லாடும் முன்றில் அமைப்பு இரண்டாமாண்டு நிறைவைக் கொண்டாட இருக்கிறது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அந்நிகழ்வில் திரு பாக்கியம் சங்கர் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்ள இருக்கிறார்.

பூகிசில் உள்ள தேசிய நூலக வாரியத்தின் அடித்தளம் ஒன்றில் அமைந்துள்ள இரண்டாவது நிகழ்வரங்கில் மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை நிகழ்ச்சி இடம்பெறும்.

அனுமதி இலவசம்.

தொடர்பிற்கு: நீதிப்பாண்டி - 8237 7006, sollaadummuntril@gmail.com

குறிப்புச் சொற்கள்