சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் நடத்தும் தமிழ் மொழி விழாவில், பாவேந்தர் 134 சுழலும் சொற்போர் இலக்கிய விழா வரும் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9.45 மணிக்கு விக்டோரியா சாலையில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்தில் நடைபெறவுள்ளது.
பாவேந்தர் பாரதிதாசனின் குடும்பவிளக்குக் காப்பியத்தில் பெரிதும் வலியுறுத்தப்படுவது பெண்ணின் பெருமையா? சமூக விழிப்புணர்வா? குடும்பப் பிணைப்பா? என்ற தலைப்பில் சொற்போர் இடம்பெறும்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா தினகரனும் சிறப்புப் பேச்சாளராக தமிழ்நாட்டு அரசு பாவேந்தர் விருதாளர், தமிழ் இணையக் கல்விக்கழக மதியுரைஞர் திரு புலவர் செந்தலை ந.கவுதமனும் கலந்துகொள்வர்.
நிகழ்வில் நாட்டியம், கவியுரை நோக்கவுரை, அறிமுகவுரை மற்றும் சமூகம், மொழி பொதுச்சேவை இன்ன பிற பணிகளில் சிறந்திருக்கும் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசனார் பொற்பதக்க விருது வழங்கப்படவுள்ளது.
நண்பகல் உணவு வழங்கப்படும்.