தாரகை இலக்கிய வட்டத்தின் மகளிர் தினக் கொண்டாட்டம் 2025

1 mins read
1c08189b-aa8b-4fad-897d-9e865561dd7d
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ‘தங்கப் பாவை’ விருது வழங்கப்படவுள்ளது. - படம்: தாரகை இலக்கிய வட்டம்

சிங்கப்பூர் வரலாற்றில் இடம்பிடித்த சாதனைப் பெண்களைக் கொண்டாடும் வகையில் மகளிர் தினக் கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்குத் தாரகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது.

பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வரும் சனிக்கிழமை (மார்ச் 8) மாலை 5 மணிமுதல் இரவு 7 மணிவரை இடம்பெறும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர் உமா ராஜன் கலந்துகொள்கிறார்.

சாதனைப் பெண்களான திருவாட்டி குவா, திருவாட்டி ஆவுடை தனலட்சுமி, திருவாட்டி எலிசபெத் கூ, திருவாட்டி ஹலீமா யாக்கோப் ஆகியோரைப் பற்றி சிறப்புப் பேச்சாளர்கள் பேசவிருக்கின்றனர்.

பெண்கள் பங்குபெறும் முத்தமிழ் அங்கம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலக்கியப் பெண்களாகும் இன்றைய பெண்கள் என்ற தலைப்பில் ஒரு போட்டியும் கடிதம் எழுதும் போட்டியும் இடம்பெறும்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ‘தங்கப் பாவை’ விருது வழங்கப்படவுள்ளது. இஸ்லாமிய அன்பர்களுக்கு நோன்பு துறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்