‘கேஜேஇ’ல் வாகன விபத்து; மருத்துவமனையில் நால்வர் அனுமதி

‘கேஜேஇ’ல் வாகன விபத்து; மருத்துவமனையில் நால்வர் அனுமதி

1 mins read
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டோரில் 70 வயது நபரும் அடங்குவார்
d89d71d1-eef4-447e-a17b-a96fcb4b78a5
விபத்து புதன்கிழமை (ஏப்ரல் 29) நிகழ்ந்தது. - படங்கள்: Martin M. Wong / ஃபேஸ்புக்
Google News Preferred Icon

கிராஞ்சி விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஏப்ரல் 29) பல வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொண்டதைத் தொடர்ந்து பயணிகள் மூவரும் தனியார் மருத்துவ உதவி வாகன ஓட்டுநர் ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சுங்கை தெங்காவைத் தாண்டி தீவு விரைவுச்சாலையை (பிஐஇ) நோக்கிய கேஜேஇ பகுதியில் விபத்து நிகழ்ந்தது. மருத்துவ உதவி வாகனம், லாரி, ‘டிப்பர் டிரக்’ வகை லாரி, வேன் ஆகிய நான்கு வாகனங்கள் சிக்கிய விபத்து குறித்து புதன்கிழமை காலை 9.05 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் வந்தது.

மருத்துவ உதவி வாகனத்தின் 56 வயது ஓட்டுநரும் அவருடன் வாகனத்தில் இருந்த, 41லிருந்து 70 வயதுக்கு உட்பட்ட பயணிகள் மூவரும் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.

‌ஷின் மின் நாளிதழின் வாசகர் ஒருவர் சம்பவம் பதிவான படங்களைப் பகிர்ந்தார். அதில் மருத்துவ உதவி வாகனம் ஒன்று ஒரு வேனுக்கும் டிப்பர் டிரக் லாரிக்கும் நடுவில் நசுங்கியிருந்தது அப்படத்தில் தெரிந்தது.

விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விரைவுச்சாலைவிபத்துமருத்துவமனைகாவல்துறைசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை