ஹெய்க் அவென்யூவில் உள்ள கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தின் கூரைமேல் உரிமமின்றி வளாகம் கட்டப்பட்டிருக்கிறது.
அந்த வளாகத்தை அகற்ற அல்லது அவ்விடத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவர ரோஸ் மெய்சன் அண்ட் ஈஐஎஸ் ரெசிடன்சஸ் (Rose Maison and EiS Residences) கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தின் ஆக உயரிய தளத்தில் இருக்கும் எட்டு ‘பென்ட்ஹவுஸ்’ (penthouse) வீடுகளின் உரிமையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூரைமேல் எழுப்பப்பட்ட அந்த வளாகத்தால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் தெரியவந்தது.
அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் முதல் சோதனைகளை நடத்தினர். கூரைமேல் உருவாக்கப்பட்ட கண்ணாடிவகளால் ஆன பகுதிகள், சன்னல்கள் உள்ள அறைகள் போன்றவற்றுக்கு உரிமம் பெற சம்பந்தப்பட்ட பென்ட்ஹவுஸ் வீட்டு உரிமையள்ரகள் முயற்சி செய்தனரா என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நகர மறுசீரமைப்பு ஆணையமும் கட்டட, கட்டடுமான ஆணையமும், “உரிமமின்றி எழுப்பப்பட்ட வளாகங்களை அகற்றவோ அப்பகுதியை வழக்கநிலைக்குக் கொண்டுவரவோ வீட்டு உரிமையாளர்கள், (கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தின்) நிர்வாக அமைப்பினர் ஆகியோருடன் நகர மறுசீரமைப்பு ஆணையம் இணைந்து செயல்படுகிறது,” என்று குறிப்பிட்டன.

