நவம்பர் முதல் சில மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்ப்பதற்கான நேரம் நீட்டிப்பு

நவம்பர் முதல் சில மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்ப்பதற்கான நேரம் நீட்டிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Oct 2026 - 6:36 pm

1 mins read

‘என்எச்ஜி ஹெல்த்’ குழுமத்தின்கீழ் செயல்படும் டான் டோக் செங் மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை ஆகியவற்றில் நவம்பர் 1 முதல் நோயாளிகளை வார்டுகளில் சென்றுபார்க்கும் நேரம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படவுள்ளது.

அதன் மூலம் நோயாளிகளுடன் அன்புக்குரியவர்கள் அதிக நேரம் செலவிட முடியும்.

அப்புதிய நடைமுறை வார இறுதி நாள்கள், பொது விடுமுறை நாள்கள் உட்பட, அக்குழுமத்தின்கீழ் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று ‘என்எச்ஜி ஹெல்த்’ வியாழக்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அச்சுகாதாரக் குழுமத்தின் கீழ் செயல்படும் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில், ஏற்கெனவே தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை வருகையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேர மாற்றம் மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளைப் பார்க்கவிரும்புவோருக்கு அதிக நீக்குப்போக்கை அளிக்கும் என்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் அருகில் அதிக நேரம் செலவிட வழிவகுக்கும் என்றும் என்எச்ஜி ஹெல்த் தெரிவித்தது.

“உங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும், குறிப்பாக, அவர்கள் நோயிலிருந்து மீண்டுவரும் பயணத்தில் விலைமதிப்பற்றது,” என்று அது குறிப்பிட்டது.

தற்போது டான் டோக் செங் மருத்துவமனையில் தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வருகையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்