சிங்கப்பூரில் திங்கட்கிழமை (ஜூலை 21) தஞ்சோங் பகார், சிராங்கூன், அப்பர் பாய லேபார் ஆகிய வட்டாரங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம், எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் இதைத் தெரிவித்தது.
திங்கட்கிழமை காலை 11.20 மணி முதல் டக்ஸ்டன் ரோட்டிலிருந்து தஞ்சோங் பகார் ரோடு வரை நீடிக்கும் கிரெய்க் ரோட்டைத் தவிர்க்குமாறு பொதுப் பயனீட்டுக் கழகம் எக்ஸ் தளத்தில் கேட்டுக்கொண்டது. பிறகு காலை 11.30 மணி முதல் ஒரு மணிநேரத்துக்கு சிராங்கூனில் உள்ள லோரோங் காம்பீரைத் தவிர்க்குமாறும் கழகம் கேட்டுக்கொண்டது.
காலை 11.38 மணி முதல் அப்பர் பாய லேபாரின் சில பகுதிகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.